பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம் – அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட முக்கிய கோரிக்கை!

தமிழக அரசு சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனப் பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பயிர்க்கடன் தள்ளுபடித் தொகையை 75 ஆயிரம் உயர்த்தி முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆணையிட்டிருப்பது உழவர்களின் கடன் சுமையைப் போக்குவதற்குப் போதுமானது அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

முழுமையாகத் தள்ளுபடி செய்தால் மட்டும் தான் அவர்களுக்குப் பயன் கிடைக்கும் என்றும், அதை விடுத்து 6 இலட்சத்து 22 ஆயிரம் பேருக்கு மட்டுமே முழுமையாகக் கடனைத் தள்ளுபடி செய்து விட்டு, மீதமுள்ள 8 இலட்சத்து 21 ஆயிரம் பேருக்கு வெறும் 35 ஆயிரம் ரூபாய் மட்டும் தள்ளுபடி செய்வது நியாயமல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

மராட்டிய மாநிலத்தில் 55 இலட்சத்து 72 ஆயிரம் உழவர்கள் வாங்கியிருந்த 36 ஆயிரத்து 585 கோடி ரூபாய் மதிப்பிலான பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்ய அம்மாநில அரசு முடிவு செய்திருப்பதைத் தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *