Hathras accident case:நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 6 பேர் கைது!

Advertisements

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர்.

80,000 மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 2.5 லட்சம் பேரைச் சட்டவிரோதமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதித்துள்ளனர்.

நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு சாரார் வெளியேறும் வாயிலை நோக்கி முன்னேறிய நிலையில் மற்றொரு சாரார் போலே பாபாவின் காலடி மண்ணை எடுப்பதற்காக எதிர்புறமாக முன்னேறியதால் இந்தக் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

இந்த விவகாரத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐ.ஜி.ஷலப் மாத்தூர் தெரிவித்துள்ளார்.4 ஆண்கள், 2 பெண்கள் என 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைதுச் செய்யப்பட்டவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழு, சேவகர்களாகப் பணியாற்றியவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.முக்கிய குற்றவாளியான பிரகாஷ் மதுகரை பிடிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரகாஷ் மதுகரைக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.மேலும், கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது, தற்போது கைது செய்யப்பட்டுள்ள 6 பேரும் அந்த இடத்தை விட்டுத் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *