
பளபளப்பான மற்றும் அழகான கூந்தல் அனைவரின் கனவாகும். இதற்கு முடியின் பராமரிப்பு (Hair Care) மிகவும் அவசியமாகும். தற்போது மாறி வரும் வாழ்க்கை முறையின் காரணமாக பலர் முடி உதிர்தல், பொடுகு தொல்லை போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதற்கு மக்கள் கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துகின்றனர்.
இதனால் தீர்வு பெற்றாலும், பல பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். அத்தகைய சூழ்நிலையில், முடி பராமரிப்புக்காக இயற்கையான பொருட்களை (Natural Ingredients) பயன்படுத்துவதே சிறந்தது. இந்நிலையில் நீங்களும் நீளமான மற்றும் பளபளப்பான கூந்தலை பெற விரும்பினால் கடுகு எண்ணெய் (Musturd Oil), பாதாம் எண்ணெய் (Almond Oil) மற்றும் வெந்தயத்தை (Fenugreek Seeds) பயன்படுத்தலாம். இந்த மூலிகை எண்ணெய் கூந்தலில் இருக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் ஒரு மேஜிக் எண்ணெய் ஆகும்.
இந்நிலையில் இப்போது இந்த அற்புதமான மேஜிக் எண்ணெயை வீட்டிலேயே எவ்வாறு தயாரிப்பது என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.
எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்:
கடுகு எண்ணெய்
கறிவேப்பிலை
ரோஸ்மேரி இலைகள்
வெந்தய விதைகள்
பாதாம் எண்ணெய்
விளக்கெண்ணெய்செயல்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கழுகு எண்ணெயை போட்டு அதை நன்கு சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், இதில் கருவேப்பிலை, ரோஸ்மேரி இலைகள், வெந்தய விதைகள், சிறிது பாதாம் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணையை ஒன்றாக போட்டு சேர்க்கவும். இதன் பிறகு இந்த எண்ணெயின் நிறம் சற்று கருமையாக மாறும்போது கேஸை ஆஃப் செய்யவும், பிறகு சிறிது நேரம் இந்த எண்ணெயை ஆறவிடவும். எண்ணெ நன்கு ஆறியப் பிறகு ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்துக்கொள்ளவும். இந்த எண்ணெயை நீங்கள் வாரத்திற்கு இருமுறை பயன்படுத்தினால், மாற்றத்தை நீங்களே காண்பீர்கள்.
இந்த மேஜிக் எண்ணெயின் நன்மைகள் என்ன?
கடுகு எண்ணெயில் ஆல்ஃபா கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை கூந்தலை சீரமைக்கவும், முடி உதிர்வை தடுக்கவும் உதவும். அதே நேரத்தில் வெந்தய விதைகள் மற்றும் ரோஸ்மரி இலைகளை கூந்தலில் தொடர்ந்து தடவி வந்தால் முடியின் வேர்களுக்கு ஊட்டமளிப்பதுடன், இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்த உதவும். இதன் காரணமாக கூந்தல் வேகமாக வளர ஆரம்பிக்கும். ஏனெனில் வெந்தய விதைகளில் புரதம் அதிகமாக உள்ளதால் இது வேர்களை வலுப்படுத்த உதவுகிறது. மறுபுறம் கறிவேப்பிலையை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் அதில் உள்ள புரதம் மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை உங்கள் கூந்தலை பளபளப்பாகவும், முடியின் வேர்களை வலுவாகவும் வைத்திருக்க உதவுகிறது.

