அருணாச்சல பிரதேச விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான் ஆகிய நாடுகள் சீனாவுக்கு தங்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து உள்ளது…

பிஜிங்: இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தில் அகாசி சின் என்ற பகுதி உள்ளது.
இந்தப் பகுதியைத் தனது நாட்டின் ஒரு பகுதியெனச் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. மேலும் அருணாச்சல பிரதேசத்தைத் தெற்கு திபெத் என்றும் சீனா கூறி வருகிறது.
இது தொடர்பான புதிய வரைபடத்தைச் சீனா கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. ஆனால் அருணாச்சல பிரதேச மாநிலம் முழுவதும் இந்தியாவுக்கு சொந்தம் என இந்தியா தெரிவித்துள்ளது.

சீனா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தில் தைவானையும் தன் நாட்டின் ஒரு பகுதியெனச் சீனா தெரிவித்துள்ளது. தென் சீன கடல் பகுதியில் 80 சதவீதம் சீனாவின் கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகிறது எனச் சீனா சொல்லி வருகிறது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான் ஆகிய நாடுகள் தங்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து உள்ளது. மேலும் இந்த 4 நாடுகளும் அருணாச்சல பிரதேச விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளன.
இந்த வரை படம் செல்லாது என வியட்நாம் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. பிலிப்பைன்ஸ் நாடும் நாங்கள் ஒரு போதும் சீனாவின் புதிய வரைபடத்தை ஏற்க முடியாது எனத் தெரிவித்து உள்ளது.


