மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை..!

நேற்று மாலையில் இருந்து மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலையில், ஒரு சவரன் ரூபாய் 91-ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்படுவதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் வர்த்தக போரால், அந்நாட்டு டாலருக்கு எதிரான, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதனால் பங்குச்சந்தைகளில், முதலீடு செய்வது கணிசமாக குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது.

இதனால் தங்கத்தின் விலை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், நேற்று ஒரு கிராம் தங்கம் ரூபாய் 11-ஆயிரத்து 340-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூபாய் 90-ஆயிரத்து 720-க்கும் விற்பனையானது.

இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூபாய் 91 ஆயிரத்திற்கு கீழ் வந்தது. இன்று காலையில் தங்கம் விலை கிராமிற்கு ரூபாய் 85 உயர்ந்து, ஒரு கிராம் ரூபாய் 11-ஆயிரத்து 425-க்கும், சவரனுக்கு ரூபாய் 680 உயர்ந்து, மாலையில், ஒரு சவரன் ரூபாய் 91-ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *