
டி.என்.பி.எஸ்.சி. சார்பில், ஒத்திவைக்கப்பட்டிருந்த குரூப் 2, 2ஏ தேர்வுகள் மார்ச் மாதம் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு மைய குளறுபடி காரணமாக நேற்று நடைபெறவிருந்த குரூப் 2, 2ஏ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், வரும் மார்ச் மாதம் 15-ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
வரும் பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவேற்றம் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 22-ல் நடைபெறவிருந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி-ஐ.ஐ.க்கான முதன்மை தேர்வு அதே தேதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


