Green Tribunal:கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் புதிய நீர்நிலை உருவாக்க யோசனை!

சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு கடந்த 9ம் தேதி அன்று வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் கிண்டி தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் 160 ஏக்கர் கொண்ட கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைத்தனர். நிலுவைத் தொகை பாக்கி காரணமாகக் கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் பல ஆயிரம் கோடி ரூபாய் வரி பாக்கியை செலுத்தவில்லையெனப் புகார் எழுந்ததையடுத்து சென்னை ஐகோர்ட் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் புதிய நீர்நிலையை உருவாக்குவது பற்றித் தமிழ்நாடு அரசு ஆலோசனை செய்ய வேண்டும் என்று தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

பசுமைப் பூங்காவாக மாற்றத் தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ள நிலையில், நீர்நிலையுடன் கூடிய பூங்காவாக உருவாக்கினால் பெருமழை காலங்களில் அதிக நீரைச் சேமிக்க முடியும் எனக் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *