
Government School Water Issue: காஞ்சிபுரம், உத்திரமேரூர் அருகே திருவந்தவாரில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. மதிய உணவு இடைவேளையில் மாணவர்கள் குடிநீரை பயன்படுத்தியபோது துர்நாற்றம் வீசியதால் ஆசிரியர்கள் குடிநீர் தொட்டியை திறந்து பார்த்துள்ளனர்.
அதில் மலக் கழிவுகள் கிடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உடனடியாக புகார் பதிவு செய்யப்பட்டு சாலவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குடிநீரை முழுவதும் வெளியேற்றி, தொட்டியை சுத்தம் செய்ய வருவாய் துறை அதிகாரிகள் உத்தவிட்டனர். இந்த சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




