Drug Smuggling Case: அமீரிடம் 11 மணி நேரம் விசாரணை!

Advertisements

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இயக்குனர் அமீரிடம் 11 மணி நேரம் என்.சி.பி. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

புதுடெல்லி: ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக இயக்குனர் அமீர் நேற்று காலை டெல்லியில் உள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அலுவலகத்துக்கு நேரில் வந்து ஆஜர் ஆனார். காலை 9 மணி அளவில் வந்த அவரிடம் பகல் 12 மணி அளவில் விசாரணை தொடங்கப்பட்டது. அதிகாரிகளின் விசாரணை நள்ளிரவு வரை தொடர்ந்தது.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இயக்குனர் அமீரிடம் 11 மணி நேரம் என்.சி.பி. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ஜாபர் சாதிக், அவரது சகோதரர்கள் உடனான தொடர்பு எப்படி ஏற்பட்டது என அமீரிடம் என்.சி.பி. அதிகாரிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.

இயக்குனர் அமீரின் செல்போனை முழுவதுமாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இயக்குனர் அமீர் அளித்த வாக்குமூலத்தை முழுவதுமாக வீடியோ பதிவு செய்த அதிகாரிகள், அமீர் அளித்த வாக்குமூலத்தையும், ஜாபர் சாதிக் அளிக்க வாக்குமூலத்தையும் முழுவதுமாக ஒப்பிட்டுப் பார்க்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மறு விசாரணைக்குத் தேவைப்படும் பட்சத்தில் இயக்குனர் அமீர் ஆஜராக வேண்டும் என்.சி.பி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2 – 3 நாட்களில் விரைவில் சந்திக்கிறேன் என இயக்குனர் அமீர் தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *