Gold smuggling: 3 கிலோ தங்கம் பறிமுதல்!

Advertisements

துபாயில் இருந்து வந்த 3 கிலோ தங்கம் பறிமுதல்!

சென்னை விமான நிலைய கழிவறையில் வைத்து பயணியிடம் தங்கத்தை கொடுத்த போது 3 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.1.07 கோடி மதிப்புள்ள 3 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து வந்த பயணி முகமது ஹாதி, ஏஜஎஸ்எல் ஊழியர்கள் மதியுல்லா, வெங்கடேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஊழியர்கள் விமான நிலைய கழிவறையில் வைத்து பயணியிடம் தங்கத்தை கொடுத்த போது சுங்க அதிகாரிகளிடம் பிடிபட்டனர். இது குறித்து  சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *