பாலியல் புகாருக்கு உள்ளான ஜெம் வீரமணி வழக்கை தி.மு.க. ஆட்சியில் மூட வலியுறுத்தியது யார்? என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை எழும்பூரில் உளள அருங்காட்சியத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, கீழடி பொருத்தவரை உணர்வு பூர்வமாக இல்லாமல் அறிவியல் பூர்வமாக அணுக வேண்டிய விஷயம் என்று குறிப்பிட்டார். கீழடியில் கிடைத்த பானைகளில் தமிழில் பெயர் எழுத்துக்கள் உள்ளது என்றும் மத்திய அரசு மிக விரைவில் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். புதிய தலைமைச் செயலக திட்டம் இன்னும் தொடங்கவில்லை என்றும் யாருடைய வாழ்வாதாரத்தையும் அழிக்கக்கூடிய செயலில் அரசு ஈடுபடாது என்றும் உறுதி அளித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், பாலியல் புகாருக்கு உள்ளான ஜெம் வீரமணி வழக்கை தி.மு.க. ஆட்சியில் மூட வலியுறுத்தியது யார்? என்றும் இந்த விஷயத்தில் முந்தைய ஆட்சியாளர்கள் யாரை காப்பாற்ற நினைக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பினார். தி.மு.க. முன்னாள் அமைச்சர் ரகுபதி கூறும் போது சம்பந்தப்பட்ட அந்த ஆடியோ தெளிவில்லாமல் இருப்பதாக கூறியிருக்கும் நிலையில் ஜெம் வீரமணி வழக்கில் எச்.டி. வீடியோவா கொடுக்க முடியும்? என்று விமர்சித்தார். இந்த வழக்கு முதலமைச்சர் தனி கண்காணிப்பில் இருப்பதாகவும் நிச்சயம் யாரும் தப்பிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.


