
சென்னை ஆதம்பாக்கத்தில் ஜெம் தொலைக்காட்சி அலுவலகத்தில் அத்தப்பூ கோலமிட்டு கேரள பாரம்பரிய முறைப்படி ஓணம் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது…

சென்னை:
ஓணம் பண்டிகை கேரளாவில் மட்டுமல்லாது தமிழ்நாட்டில் சென்னை, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி பகுதிகளில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சென்னை ஆதம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் ஜெம் தொலைக்காட்சி அலுவலகத்தில் ஓணம் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.அத்தப்பூ கோலமிட்டு அலங்கரிக்கப்பட்டிருந்த குத்துவிளக்கினை ஏற்றி வைத்த ஜெம் தொலைக்காட்சி நிறுவனர் என்.சீத்தாபதி அவர்கள், அனைவருக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து, ஓணம் பண்டிகையின் சிறப்புகுறித்து பேசிய ஜெம் பக்தி தொலைக்காட்சியின் ஆசிரியர் அருள்மொழி, மகாபலி மன்னனை வரவேற்கும் இந்தப் புண்ணிய திருநாளில் மகாபலி நமக்கு அமைதி, வளம், நல்ல ஆரோக்கியத்தை வழங்கி நாம் மகிழ்ச்சியான குடும்பமாக வாழ அருள்புரியட்டும் எனத் தெரிவித்தார்.

பின்னர், தொலைக்காட்சி ஊழியர்களில் கேரள பாரம்பரிய புத்தாடை உடுத்தி நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

