Ganja smuggling: காய்கறிகள் நடுவே மறைத்து வைத்துக் கஞ்சா கடத்தல்!

Advertisements

தென்காசி அருகே காய்கறிகள் நடுவே மறைத்து வைத்துக் கஞ்சா கடத்தல்.

காய்கறிகள் நடுவே மறைத்து வைத்துக் கஞ்சா கடத்தி வந்த நபர்களை அதிரடியாகச் சுற்றி வளைத்துப் பிடித்த தென்காசி மாவட்ட காவல்துறையினர்.

தென்காசி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் மற்றும் கஞ்சா போன்றவற்றின் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்கும் விதமாகத் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படையினர் மற்றும் சோதனை சாவடிகள் அமைத்துத் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வந்த நிலையில் காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சிவகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொல்லம் To திருமங்கலம் சாலையில் அமைந்துள்ள சிவகிரி சோதனை சாவடியில் காய்கறி மூட்டைக்குள் கஞ்சாவை நூதனமாக மறைத்து வைத்து வாகனத்தில் கடத்தி வந்த புளியங்குடி கற்பகவீதி தெருவைச் சேர்ந்த முருகானந்தம்(29) என்ற நபரையும், கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த ஷீயா பஷீர்(27) என்ற இரண்டு நபர்களையும் அதிரடியாகச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர், மேலும் அவர்களிடமிருந்து இருந்து சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான 105 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய Ashok Leyland dost வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
குற்றவாளிகளைத் திறன்பட செயல்பட்டு கைது செய்த சிவகிரி காவல் ஆய்வாளர் திருமதி. சண்முக லட்சுமி, Special Team சார்பு ஆய்வாளர் திரு. வேல்முருகன், காவலர்கள் சந்தன பாண்டியன், சுந்தர்ராஜ், கண்ணன், சையத் அலி, கருப்பசாமி, அழகுதுரை மற்றும் தனிப்பிரிவு காவலர் கருப்பசாமி ஆகியோருக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் அவர்கள் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
150 கிலோ கஞ்சா பிடிபட்டதால் சிவகிரி பகுதிகளில் மட்டுமல்லாது தென்காசி மாவட்டம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாம்சங் அவர்கள் கஞ்சா ஒழிப்பதற்காகத் தனிப்படை அமைத்துத் தீவிர வேட்டை நடத்தி வரும் சூழலில் 150 கிலோ கஞ்சா தனிப்படையினர் சோதனை செய்து பிடித்ததில் தென்காசி மாவட்ட பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தென்காசி மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் காவலர்களை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *