Crime: காவலர்கள் போல நடித்து லட்சக்கணக்கில் பணம் பறித்த கும்பல்!

Advertisements

கோவை: ஆபாச படம் பார்த்ததால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனக் காவலர்கள் போலும் நடமாடும் நீதிமன்றம் போலும் நடித்துப் பல்வேறு இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்த கும்பலைச் சைபர் கிரைம் போலிசார் கைது செய்துள்ளனர்.

கோவையைச் சேர்ந்த சபரி என்ற இளைஞர் சக நண்பர்களுடன் சேர்ந்து சில இளைஞர்களைச் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நீங்கள் ஆபாச படங்கள் பார்த்துள்ளீர்கள் உங்கள்மீது  நடமாடும் நீதிமன்றம்மூலம் மீது வழக்கு புனையப்பட உள்ளது. இதிலிருந்து தப்பிக்க பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளார்.

மேலும் செல்போனில் பேசிக் கொண்டிருக்கும்போது காவல்துறையினர் பயன்படுத்தும் வாக்கி டாக்கி ஒலியையும் எழுப்பி உள்ளார். இதனை உண்மையென நம்பிய இளைஞர்கள் சபரி கூறிய வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி உள்ளனர். இந்த முறையைப் பயன்படுத்தி கொண்டு சபரி மற்றும் அவரது சக நண்பர்கள் பல இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பணத்தை கொடுத்துப் பாதிக்கப்பட்ட சில இளைஞர்கள் சபரியின் குழுமீது சந்தேகமடைந்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை விசாரித்த சைபர் கிரைம் போலிசார் இதனைச் செய்த சபரி(22), ஜப்பான்(எ) ஆலன்(19), கிச்சா(எ) கிஷோர்(20), சின்னபகவதி(எ) பிரிவின் மோசஸ்(20), வெய்ட்டி(எ) அபிஷேக் குமார்(20), வடக்கு(எ) தனுஷ்குமார்(20), தோனி(எ) பிரவீன் குமார்(20), அப்பு(எ) அகஸ்டின்(20), மனோஜ்(20)ஆகிய 9 பேரைக் கைது செய்துள்ளனர். அவர்களிடம் கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணைநடத்திவருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *