
விருத்தாசலத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு காகித கூழ் விநாயகர் சிலை செய்யும் பணி தீவிரம்…
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காகித கைவினை பொருட்கள் செய்து வருகின்றனர்
இந்த நிலையில் தற்போது விநாயகர் சதுர்த்தி வருகின்ற 18 ஆம் தேதி வரவுள்ளதால் அதனை முன்னிட்டு அப்பகுதியில் களிமண் வினாயகர், மற்றும் காகித கூழினால் விநாயகர் பொம்மைகள் செய்து வருகின்றனர்
இந்த விநாயகர் ஒரு அடி முதல் 7 அடிவரை செய்து வருகின்றனர் இதில் பாகுபலி, நரசிம்மர், கற்ப விநாயகர், ரதம் பிள்ளையார், சிவசக்தி, உள்ளிட்ட பல்வேறு வடிவில் விநாயகர் செய்து வருகின்றனர்.

அதேபோல் மண் பிள்ளையாரும் ஒரு அடி முதல் 5 அடிவரை மண் பிள்ளையாரும் செய்து வருகின்றனர் தற்போது வியாபாரிகள் முன்கூட்டியே வந்து தங்களுக்கு தேவையான விநாயகர் சிலையை ஆர்டர் செய்து செல்கின்றனர் கடந்த கொரோனா காலகட்டத்தில் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்பொழுது காகிதம் மற்றும் மண் விநாயகர் சிலை செய்யும் தொழில் மும்முரமாக நடைபெற்று வருகிறது

இதற்குத் தேவையான மூலப் பொருட்கள் மண் மற்றும் காகித விலை உயர்வடைந்துள்ளது வியாபாரிகள் பழைய விலைக்குத் தற்போது கேட்டு வருகின்றனர் ஆனால் அவர்களுக்குத் தொழிலே இது என்பதால் வேற வழியின்றி அவர்களுக்குக் குறைந்த விலையில் கொடுத்து வருகின்றனர் ஒரு விநாயகர் சிலை குறைந்த விலை 20 ரூபாய் முதல் அதிக விலை 18 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகின்றனர்.

