Gadar 2: 450 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியது!

Advertisements

கதர் 2′ திரைப்படம் உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் 450 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியது…

மும்பை: கடந்த 2001-ம் ஆண்டு சன்னி தியோல் மற்றும் அமீஷா படேல் நடிப்பில் வெளியான ஹிந்தித் திரைப்படம், “கதர்: ஏக் பிரேம் கதா”. இந்தப் படத்தின் தொடர்ச்சியாக ‘கதர் 2’ படம் எடுக்கப்பட்டு கடந்த 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படம் வெளியாகி 17 நாட்களில் 450 கோடிரூபாய் வசூலை தாண்டியுள்ளது. இதன்மூலம் ‘கதர் 2’ உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூலில் “வேகமாக 450 கோடி”ரூபாய் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

தற்போது அதன் தயாரிப்பு நிறுவனம் இதனை மகிழ்ச்சியுடன் தனது டுவிட்டர்பக்கத்தில் தெரிவித்து உள்ளது.

1971 ஆம் ஆண்டு நடப்பது போல் அமைக்கப்பட்ட, “கதர் 2”, தாரா சிங் தனது மகன் சரண்ஜீத் சிங்கை பாகிஸ்தான் ராணுவத்திடமிருந்து மீட்பதற்காகப் பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட பயணத்தைக் குறித்த கதையம்சம் கொண்டது. இதில் படேல், மனிஷ் வாத்வா மற்றும் கௌரவ் சோப்ரா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *