Onam: தமிழகம், கேரளாவில் களைகட்டிய பண்டிகை!

கேரள மக்கள் அதிகாலையிலேயே எழுந்து வீடடு முன்பு அத்தப் பூக்கோலம் போட்டுக் திருவோணம் கொண்டாட்டங்களைத் தொடங்கி விட்டனர்…

திருவனந்தபுரம்: தமிழ் புத்தாண்டின் முதல் மாதமாகச் சித்திரை மாதம் கொண்டாடப்படுவது போலவே, கேரளாவில் சிங்கம் என்ற பெயரில் ஆவணி மாதம்தான், மலையாள ஆண்டின் முதல் மாதமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தச் சிங்கம் மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்தில் அத்தப்பூ கோலத்துடன் துவங்கி, திருவோணம் நட்சத்திரம்வரை 10 நாட்களுக்குச் சாதி, மத வேறுபாடுகளை மறந்து ஓணம் பண்டிகையை மக்கள் கேரள மக்கள் கொண்டாடி வருகின்றனர். 10 நாட்களும் கொண்டாட்டம்: இந்த 10 நாட்களிலும் 10 வகை பூக்களை வைத்தும் அத்தப்பூ கோலம் போட்டும் பெண்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

அந்தவகையில், இன்றைய தினம் ஓணம் பண்டிகை கோலாகலமாகக் கேரளாவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தவகையில், கேரள மக்கள் அதிகாலையிலேயே எழுந்து வீடடு முன்பு அத்தப் பூக்கோலம் போட்டுக் கொண்டாட்டங்களைத் தொடங்கி விட்டனர்.

அனைவரும் புத்தாடை அணிந்து கோயிலுக்குச் சென்று வழிபாடுகளை நடத்தி வருகிறார்கள்.திருவனந்தபுரத்தில் உள்ள பழவங்காடி ஸ்ரீ மகா கணபதி கோவிலுக்குப் பொதுமக்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கொச்சியில் உள்ள திருக்காக்கரை வாமன மூர்த்தி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கேரளாவில் ஓணம் பண்டிகையின் ஒரு பகுதியாகத் திருவனந்தபுரத்தில் ஒரு சாலை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது

பார்ப்பதற்கு கண்கொள்ளாக்காட்சியாக உள்ளது. மேலும், தங்களது சொந்தபந்தங்கள், அக்கம்பக்கத்தினருக்கு உணவு, உடை மற்றும் பரிசுப் பொருட்களை அளித்து மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர். “கானம் விற்றாவது ஓணம் உண்” என்பது கேரளா பழமொழி.

அதற்கேற்ப, அறுசுவைகளில் கசப்பை தவிர மற்ற காய்கறிகளை வைத்து 64 வித உணவு வகைகளைக் கேரள மக்கள் தயாரித்து பரிமாறி மகிழ்ந்து வருகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *