மருத்துவமனை கேண்டீன்களை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள கேண்டீனில் உணவு பொருட்களின் மீது எலி ஓடுவது போன்ற வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சம்பந்தப்பட்ட கேண்டீனை மூட ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் பாலாஜி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு பொது மருத்துவமனைகளில் இயங்கி வரும் கேண்டீன்களை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனைகளில் டெண்டர் விடப்பட்டுள்ள கேண்டீன்களை உடனே ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.