பிரான்ஸ் அதிபர் மேக்ரானை சந்தித்ததில் பெருமை – மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர்

பிரான்ஸ் அதிபர் மேக்ரானை சந்தித்ததில் பெருமை அடைவதாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துரைக்க  மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் அவர் நேற்று பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து பேசினார்.

அப்போது இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். பின்னர் அமைச்சர் அவரது   எக்ஸ் தள பக்கத்தில், ‘பிரான்ஸ் அதிபர் மேக்ரானை சந்தித்ததில் பெருமை அடைவதாக தெரிவித்ததார்.  பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை பிரான்ஸ் அதிபர் ஆதரிப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *