நாம் தமிழர் கட்சியில் இருந்து முன்னாள் மாவட்ட செயலாளர் விலகல்!

Advertisements

நாமக்கல்: 

நாம் தமிழர் கட்சியிலிருந்து நாமக்கல் மாவட்ட முன்னாள் மாவட்ட செயலாளர் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நாமக்கல் மாவட்ட செயலாளர் வினேத்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடந்த 2009ம் ஆண்டு முதல் நாம் தமிழர் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தோம் நாமக்கல் மாவட்டம் மாவட்ட செயலாளராகப் பதவி வகித்து வந்தேன். மாவட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் பொதுக்கூட்டங்கள் அனைத்துக்கும் செலவு செய்து நடந்து வந்தோம். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானின் முன்னுக்கு பின் முரணான பேச்சுகளால், நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர்களாகிய நாங்கள் 50-க்கும் மேற்பட்டோர் கட்சியிலிருந்து வெளியேறுகிறோம்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்னும் பல பேர் விலங்குவர். சீமானின் செயல்பாடுகள் கொள்கை ரீதியாக இல்லாமல் இருக்கிறது. நாம் தமிழர் கட்சியிலிருந்து யாரை தொடர்பு கொள்வது என்பதே தெரியவில்லை. நாங்கள் எந்தக் கட்சியில் இணைவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகள் வெற்றியை நோக்கிய பயணமாக இல்லை. ஆளுங்கட்சி அழுத்தம் எதுவும் எங்களுக்கு இல்லை. கட்சியிலிருந்து விலகியவர்களை ஒருவரையும் சீமான் தொடர்பு கொள்ளவில்லை. தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கின்றனர். அதனால் அடுத்தடுத்து வெளியேறுகின்றனர்” என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *