
ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற, 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக ரோந்து பணி சென்ற இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சுற்றி வளைத்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
அவர்களது 3 விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதால், இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

