Fish Briyani Recipe: மீன் பிரியாணி செய்வது எப்படி?

Advertisements

பிரியாணி என்றாலே அசைவுப் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று என்றே சொல்லலாம். குழந்தைகள் முதல் பெரியோர்வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். அதிலும் பலர் காலை, மதியம், இரவு என மூன்று வேலையும் பிரியாணி கொடுத்தாலும் சலிக்காமல் சாப்பிடுவார்கள்.

பொதுவாகவே, பிரியாணியில் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணியெனப் பல வகைகள் உண்டு. அவற்றில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ருசியில் இருக்கும். அந்த வகையில்,  கடல் உணவுப் பிரியர்கள் அதிகம் விரும்பிச் சாப்பிடுவது, மீன். எனவே, இந்தப் பின்னணியில், ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் வீட்டிலேயே மீனை வைத்துச் சுவையான பிரியாணி செய்யலாம். சரி வாங்க இப்போது கடல் பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் ருசியான ‘மீன் பிரியாணி’ எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

மீன் – 1 கிலோ (முள் இல்லாதது)
பாஸ்மதி அரிசி – 2 கப்
வெங்காயம் – 2 (நறுக்கியது)
தக்காளி – 3 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 3
பிரியாணி மசாலா – 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
கரம் மசாலா – 1 ஸ்பூன்
பெரும்சீரகம் – 1 ஸ்பூன்
கிராம்பு – 4
மிளகு – 4
ஏலக்காய் – 4
தயிர் – 1 கப்
பிரியாணி இலை – 3
இலவங்கப்பட்டை – 1 துண்டு
கொத்தமல்லி தூள் – 1 ஸ்பூன்
வத்தல் பொடி – 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை ஸ்பூன்
நெய் – 2 ஸ்பூன்
எண்ணெய் – 1 ஸ்பூன்
தேங்காய் பால் – கால் கப்
புதினா, கொத்தமல்லி இலை, உப்பு, தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் மீன் துண்டுகளை எடுத்துச் சுத்தமாகக் கழுவி தனியாக வைக்கவும். பிறகு பாசுமதி அரிசியை நன்கு கழுவி தண்ணீரில் ஊறவைக்கவும்.

இப்போது கேஸ் அடுப்பைப் பற்ற வைத்து அதன் மீது ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நெய் மற்றும் எண்ணெய் சேர்க்க வேண்டும். பின் அதில் பிரியாணி இலை, பட்டை ஏலக்காய், கிராம்பு, பெருஞ்சீரகம் சேர்க்கவும். அதன்பிறகு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுதுகள் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனவுடன், அதில் தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு, மல்லித் தூள், மஞ்சள்தூள், வத்தல் பொடி, சிறிதளவு உப்பு, கரம் மசாலா தூள், தயிர் சேர்த்து வதக்கவும்.

பின்னர், அதில் கொத்தமல்லி மற்றும் புதினா இலை சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். மசாலாவில் எண்ணெய் பிரிந்த பிறகு அதில் இப்போது மீன் துண்டுகளைச் சேர்க்கவும். அதன் பிறகு ஊற வைத்த பாஸ்மதி அரிசி அதில் சேர்க்க வேண்டும். பிறகு மீன் மற்றும் அரிசி உடையாதவாறு பொறுமையாகக் கிண்டவும் இப்போது அதில் எடுத்து வைத்த தேங்காய் பாலை ஊற்றவும். 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடலாம். இப்போது டேஸ்டியான மீன் பிரியாணி ரெடி!

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *