மதுரா நகரில் பற்றி எரிந்த பட்டாசு கடைகள்..சத்தத்துடன் வெடித்த பட்டாசுகள்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா நகரில் தீபாவளியை ஒட்டி பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில், ஒரு கடையில் முதலில் ஏற்பட்ட தீ விபத்தில் பட்டாசுகள் வெடித்துச் சிதறி அப்படியே அருகில் உள்ள கடைகளுக்கும் தீ மலமலவென பரவியது. இந்த விபத்தில் 7 கடைகளும் தீக்கிரையாகின.
தீ மட்டுமல்ல பயங்கர சத்தமும் கேட்டதால் மக்கள் பீதியில் அலறியடித்து ஓடினர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்தனர். அது மட்டுமல்லாது மீட்புக் குழுவும் துரித நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது