Fire Accident: அக்குபஞ்சர் கிளினிக் எரிந்து நாசம்!

Advertisements

பெரம்பூரில் மின் மோட்டாரில் மின் கசிவு ஏற்பட்டு பயங்கர தீ விபத்தில் அக்குபஞ்சர் கிளினிக் எரிந்து முற்றிலும் நாசம்ஆனது.

சென்னை பெரம்பூர் ராமச்சந்திரன் தெரு பகுதியை சேர்ந்தவர் கஜேந்திர பாபு{வயது 85}. இவருக்கு சொந்தமான கட்டிடத்தில் கீழ்தளத்தில் முத்துக்குமார் {வயது} 60 என்ற நபர் அக்குபஞ்சர் கிளினிக்கும்  முதல் தளத்தில் இரண்டு வாடகை வீடுகளும் உள்ளன.

நேற்று மாலை  இவரது வீட்டில் மின்மோட்டார் ஓடிக்கொண்டிருந்த போது திடீரென்று தீ பிடிக்க தொடங்கியது.  மின் மோட்டார் இருந்த அறை முழுவதும் தீப்பற்றி எரிந்ததுமே அப்போது அருகில் இருந்த அக்குபஞ்சர் கிளினிக்கும் மல மலவென  தீ பரவியது.

உடனடியாக அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் முதல் தரத்தில் இருந்து வாடகை வீட்டில் இருந்த நபர்களும் மொட்டை மாடிக்கு ஓடிச் சென்று பக்கத்து வீட்டிற்கு தப்பி சென்றனர் ,

இது குறித்து தகவல் அறிந்த வியாசர்பாடி தீயணைப்பு துறை அலுவலர் எட்வின் தலைமையிலான  தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி தீயை  அணைத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த செம்பியம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மின் மோட்டாரில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தீ மல மலவென்று பரவி அருகில் இருந்த கிளினிக் பகுதியில் தீ பரவியது தெரிய வந்தது. இதில் கிளினிக்கில் இருந்த சோபா செட். நாற்காலி மின்விசிறி. உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து இது குறித்து செம்பியம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *