Kalki 2898 AD:முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

டெல்லி:நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ‘கல்கி 2898 ஏடி’. 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். கமல்ஹாசன் வில்லனாக நடித்துள்ளார்.

இதனிடையே, கல்கி திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் இத்திரைப்படம் வெளியானது.

இந்நிலையில், கல்கி திரைப்படம் நேற்று வெளியான நிலையில் முதல் வசூல் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, கல்கி திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 180 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இத்திரைப்படம் இந்தியாவில் மட்டும் 95 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் வார விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் விரைவில் ரூ. 400 கோடியைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *