
ஆவடி பட்டாபிராம் அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்திஅங்குள்ள பொதுமக்கள் பெருமாள் கோவிலில் வினோத முறையில் கடவுளிடம் மனு அளித்து வழிபாடு செய்தனர்.
ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் 1973 ஆம் ஆண்டு கட்டப்பட்ட,55 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீதர பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் பட்டபிராம் சுற்று பகுதியில் உள்ள பெண்கள் பொது மக்கள் என கடவுள் வழிபாடு செய்து வருகின்றனர், இந்நிலையில் கோவிலின் மிக அருகாமையில் கோவிலின் எதிர்ப்புறமே புதிதாக அரசு டாஸ்மாக் மதுபான கடையை கொண்டு வந்துள்ளது. இதனை எதிர்த்து அப்பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் பொதுநல சங்கம் பல்வேறு கட்சிகளை சார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு அரசு அதிகாரிகளிடம் மனுக்களை அளித்துள்ளனர்.
இருந்தும் இதுவரையும் கோவிலின் எதிர்ப்புறம் அமைந்துள்ள மதுபான கடையை அரசு மூட எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான பொதுமக்கள் இன்று அயோத்தியில் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் திறப்பு விழாவை முன்னிட்டு தமிழகம் எங்கும் பல்வேறு கோவில்களில் சிறப்பு தரிசனம் தெய்வ வழிபாடு நடந்து வந்த நிலையில் பட்டாபிராம் பகுதி ஸ்ரீதர பெருமாள் கோவிலில் பொதுமக்கள் அனைவரும் அரசு அதிகாரிகளிடம் கொடுத்த மனுக்கள் அத்தனையும் கடவுளின் முன்பு வைத்து பெருமாளே மதுபான கடையை மூடி விடவும், பெருமாளே டாஸ்மாக் கடையை மூடவும் என கோஷங்களை எழுப்பி, ஸ்ரீதர பெருமாலிடம் மனுவை வைத்து வழிபட்டு, வினோத முறையில் கடவுள் வழிபாடு பட்டாபிராம் பகுதியில் நடைபெற்றது..
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மன உளைச்சலோடு அளித்த பேட்டியில் 1.ஷர்மிளா
ஆவடி பட்டாபிராம் 15ஆவது வார்டு,பெண்கள் கோவிலுக்கு வருவது வெட்க தலைகுனிவோடு வருவதாக அமைந்துள்ளது எதிரிலே அமைந்துள்ள மதுபான கடையில் ஆண்கள் குடித்துவிட்டு திரிவதால் பெண்கள் பள்ளி குழந்தைகள் கோவிலுக்கு வர தயக்கம் ஏற்படுகிறது தயவுசெய்து மதுபான கடையை அகற்ற வேண்டும்
2.ஜெயகுமார்,பட்டாபிராம் பாரதியார் நகர் குடியிருப்போர் நல சங்கம்,திருக்கோவிலின் அருகே எதிரிலே அமைந்துள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள், பொதுமக்கள் மற்றும் நல சங்கங்கள் இணைந்து அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மனுக்களை அளித்து அவர்களின் இல்லங்களிலும் சென்று அளித்து எவ்வித மாற்றமும் ஏற்படாத சூழ்நிலையில் வேறு வழியே இன்றி ஸ்ரீதர பெருமாள் இடமே மனுவை அளித்து வினோதமாக வழிபட வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகி பெருமாளயே நம்பி இருக்கிறோம்…இவ்வாறு தங்கள் கோரிக்கைகளை கடவுளுக்கும் அரசுக்கும் முன் வைத்துள்ளனர்..

