மீண்டும் கீழ் சரிந்த தங்கம் விலை..!

சென்னை:

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் ஏறுவதும், குறைவதுமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்ந்து நேற்று முன்தினம் சவரன் 58 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.

நேற்று தங்கம் விலையில் மாற்றம் இல்லாததால் ஒரு கிராம் தங்கம் ரூ.7,285-க்கும் ஒரு சவரன் ரூ.58,280-க்கும் விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 104 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57 ஆயிரத்து 840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.7,230-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.101-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *