Ashwini Vaishnaw:எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றன!

புதுடில்லி: ‘லோகோ பைலட்டுகள் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றன’ என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: லோகோ பைலட்டுகளுக்கு போதிய ஓய்வு வழங்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் 34 ஆயிரம் பேர் ரயில்வேயில் பணி அமர்த்தப்பட்டனர். தற்போது 18 ஆயிரம் ஊழியர்களுக்கான ஆட் சேர்ப்பு பணிகள் நடைபெறுகிறது.

லோகோ பைலட்டுகள் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றன. அவசர காலங்களில் மட்டுமே லோகோ பைலட்டுகளின் பணி நேரம் சற்று அதிகமாக இருக்கும். அவர்களின் பணி நேரம் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது.

லோகோ பைலட்டுகளுக்கு பயணங்களுக்குப் பிறகு ஓய்வு கொடுக்கப்படுகிறது. சராசரியாக ஜூன் மாதத்தில் 8 மணி நேரத்திற்கும் குறைவாகவே பணி நேரம் உள்ளது. 2014ம் ஆண்டுக்குப் பிறகு ரயில்களில் ரயில் ஓட்டுநர் அறை உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *