அமெரிக்காவின் உணவுப் பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த வரி நீக்கம்..!

அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் உணவுப் பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்தக் கூடுதல் வரியை நீக்குவதாக அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.

அமெரிக்க நாட்டின் அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் உலக நாடுகள் மீது கடுமையான இறக்குமதி வரி விதித்ததால், அமெரிக்காவில் விலைவாசி உயரத் தொடங்கியது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், சமீபத்தில் ஆளுநர், மேயர் தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது.

இதையடுத்து புளோரிடாவுக்குச் சென்ற அதிபர் டொனால்ட் டிரம்ப் விமானத்தில் அளித்தப் பேட்டியில், மாட்டிறைச்சி, காபி, தக்காளி, வாழைப்பழம் உள்ளிட்ட வெப்ப மண்டலப் பழங்கள் மீதான வரியை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இறக்குமதி வரி விதிப்பால் விலைவாசி உயர்வு என்பதால் சில பொருட்களுக்கு சரியாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலான சுமை பிற நாடுகள் மீது தான் சுமத்தப்படுகிறது எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *