எடப்பாடி பழனிச்சாமியுடன், நயினார் நாகேந்திரன் பேச்சு..!

Advertisements

தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். பேச்சு சுமூகமாக நடைபெற்றதாக நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வரும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ், திமுக இடம்பெற்ற இந்தி கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நான்முனைப் போட்டி நிலவுவது உறுதியாகியுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் இன்று சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை மாநில பாஜக தலைவர் நாகேந்திரன் சந்தித்துப் பேசியுள்ளார்.

சந்திப்புக்குப் பின் வெளியே வந்த நாகேந்திரனிடம் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டதா? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குத் தொகுகள் எத்தனை என்பது முக்கியமில்லை என்றும், திமுகவைத் தோற்கடிப்பதே முக்கியம் என்றும் நாகேந்திரன் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இ.றுதியில் தமிழ்நாட்டுக்கு வர உள்ளதாகத் தெரிவித்தார். பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்று பின்னர் கூறுவதாகவும் நாகேந்திரன் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *