
உலக மீனவர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர் மற்றும் சிறுவர் ,சிறுமிகளுக்கு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் R.செல்வம் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
புதுச்சேரியில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மனவெளி, நோணாங்குப்பம் மற்றும் பூரணாங்குப்பம் உள்நாட்டு மீனவர் கிராமங்கள் சார்பாக மகளிர் மற்றும் சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.இதில் மகளிர் மற்றும் சிறுவர் சிறுமிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்தநிலையில் போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கும் மற்றும் சிறுவர் சிறுமிகளுக்கான பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி சட்டப்பேரவை தலைவர்ஏம்பலம் R.செல்வம் அவர்கள் தலைமையில் அரியாங்குப்பம் டோல்கேட் கண்ணி கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
விழாவில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கும் சிறுவர் சிறுமிகளுக்கும் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் போன்ற பரிசுகளை சட்டப்பேரவை தலைவர்ஏம்பலம் R.செல்வம் வழங்கினார்… நிகழ்ச்சியில் மனவெளி, நோணங்குப்பம் மற்றும் பூரணாங்குப்பம் உள்நாட்டு மீனவர் கிராம பொதுமக்கள்,மீன் வளத்துறை அதிகாரி திரு. காங்கேயன், தேவசேனதிபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.



