Dumka: சிறுவனை அடித்தே கொன்ற மாட்டின் உரிமையாளர்கள்!

ஜார்க்கண்ட்டில் நிகழ்ந்த கொடூரம். இருசக்கர வாகனத்தில்   எருமை மாட்டை மோதிய சிறுவனை அடித்தே கொன்ற மாட்டின் உரிமையாளர்கள்!

ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் சந்தாலி தோலாவில் குர்மஹாட்டில் 16 வயது சிறுவன்  இருசக்கர வாகனத்தில் தனது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த போது  தாதி எனும் கிராமத்திற்கு அருகே வரும்போது எருமை மாட்டின் மீது மோதியுள்ளார். இதனால் மாட்டின் உரிமையாளர்களுக்கும்  அச் சிருவர்களுக்கும் இடையில் வாக்கு வதம் ஏற்பட்டுள்ளது. Dumka

சிறுவன் மாட்டுக்கு இழப்பீடு தர ஒப்புக் கொண்டுள்ளார். இருப்பினும் இதனை ஏற்காத உரிமையாளர் கடுமையாகத் தாக்க நண்பர்கள் ஓடிவிட்ட நிலையில் ஒரு சிறுவன் மட்டும் மாட்டிக்கொண்டான்.அவன் பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனைத் தாக்கியவர்களை  கைது செய்யக் கோரி மக்கள் போராட்டம் நடத்தினர். காவல்துறை உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *