பாஜக பொறியில் திமுக சிக்கிவிடக்கூடாது! – கி.வீரமணி

பா.ஜ.க. பொறியில் தி.மு.க. சிக்கிவிடக்கூடாது எனத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திமுக தொகுதி மறுவரையறை பற்றி 25 ஆண்டுகளுக்குத் தற்போதைய முறையே தொடரும் என்பதில் உறுதியுடன் இருக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தென்மாநிலங்களைப் பாதிக்கும் வகையில், எந்த முயற்சிக்கும் இடந்தரக்கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிக இடங்கள், விகிதாச்சாரக் கணக்கு என்ற பா.ஜ.க. பொறியில் தி.மு.க. சிக்கிவிட்டால்,அரசியல் எதிரிகளுக்குச் சரியான வாய்ப்புத் தந்ததாக ஆகிவிடக் கூடும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *