மத்திய அரசின் மசோதாவுக்கு திமுக பச்சைக்கொடி.. பின்னணியில் இருக்கும் அரசியல் .!

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவரும் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கத் திமுக முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் திங்களன்று நடைபெற உள்ளது. இதில் தொகுதி மறுவரையறை மசோதா வாக்கெடுப்புக்குக் கொண்டுவரப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்போதுள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை, ஒவ்வொரு மாநிலத்திலும் இப்போதுள்ள விகிதத்திலேயே ஐம்பது விழுக்காடு அதிகரிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருந்தபோது இந்த மசோதாவை எதிர்த்தது. ஆனால் இப்போது இதை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்துச் சென்னையில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, மக்களவையில் தமிழ்நாட்டுக்கு இப்போதுள்ள 7 புள்ளி ஒன்று எட்டு விழுக்காடு பிரதிநிதித்துவம் குறையாது என்று உறுதியளிக்கப்பட்டதால் தொகுதி மசோதாவை ஆதரிக்கத் திமுக முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *