ஒரே ஆட்சி நோக்கமா..? திமுக மீது திருமாவளவன் கடும் விமர்சனம்.!

ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே ஆட்சி என்ற பாஜக அரசியலுக்கு வழிவகுப்பதாகத் திமுகவின் நிலைப்பாடு உள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பைவிடத் தொகுதி மறுவரையறையில் திமுக நிலைப்பாடு அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பினால் தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் சூழலில், தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கும் திமுகவின் நிலைப்பாடு தேசத்திற்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.

ஒரே தேசம் ஒரே தேர்தல் ஒரே ஆட்சி என்ற சங்கப் பரிவாரச் சதி அரசியலுக்கு வழிவகுப்பதாய்த் திமுக நிலைப்பாடு உள்ளது என்று குற்றம் சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *