
உலக அரசியலில் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் தான் பதற்றம் என்பது குறைந்து அமைதி என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போய்விட்டது..அந்த வகையில் , அணைத்து நாடுகளுக்கும் வரியை போட்டு அவதிக்குள்ளாக்கும் வரிப்புலி அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்கள் எப்போதுமே எதையாவது செய்து உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துவிடுவார். அப்படி அவர் செய்த ஒரு லேட்டஸ்ட் விஷயம் தான் இப்போதைய ஹாட் டாபிக் என்றே சொல்லலாம்..
கடல் வழிப்பாதையான ‘ஹார்முஸ் ஜலசந்தியை’ அமெரிக்காவுக்குச் சொந்தம் என்று அவர் ஒரு மேப்பைப் போட்டு அடித்துவிட, ஈரான் சும்மா இருக்குமா? அதற்குப் பதிலடியாக அமெரிக்காவையே உலுக்கும் விதமாக ஒரு செக் வச்சிருக்கு.அது என்ன..? தற்பொழுது சட்டப்படி ஹார்முஸ் யாருக்கு தான் சொந்தம் என்பது குறித்து பார்க்கலாம்.. மேலும், வீடியோ – வை full- ஆ பாருங்க..அதுல ஏதேனும் சந்தேகங்கள் இருந்தா கமெண்ட் ல சொல்லுங்க..
முதலில், இந்த ஹார்முஸ் ஜலசந்தி எங்கு இருக்கிறது, ஏன் இவ்வளவு முக்கியம் என்பதைப் பார்ப்போம். பாரசீக வளைகுடாவையும் ஓமான் வளைகுடாவையும் இணைக்கும் இந்த நீர்வழிப்பாதை வழியாகத்தான் உலக நாடுகளுக்குத் தேவையான எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் பயணிக்கின்றன.
ஈரான் – அமெரிக்கா இடையிலான பனிப்போர் காரணமாக இந்தப் பகுதியில் எப்போதுமே ஒரு பதற்றம் நிலவி வரும். இந்தச் சூழலில்தான், அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு வரைபடத்தை வெளியிட்டார். அதில், ஹார்முஸ் ஜலசந்தி பகுதி தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அது அமெரிக்காவின் ஒரு பிராந்தியப் பகுதி என்றும் அதிரடியாக அறிவித்தார்.
சற்றும் தாமதிக்காமல் அமெரிக்க வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கும் இந்தப் படத்தை அப்படியே ஷேர் செய்தது. உலக நாடுகளை இது பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சரி, டிரம்ப் நினைத்த மாத்திரத்தில் ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்காவின் சொந்தப் பகுதியாக்க முடியுமா? சட்டப்படி இது சாத்தியமா? என்று பார்த்தால், கட்டாயம் இல்லை என்கிறார்கள் சர்வதேச சட்ட வல்லுநர்கள்.
ஹார்முஸ் ஜலசந்தி, வடக்கே ஈரானுக்கும் தெற்கே ஓமானுக்கும் இடையில் அமைந்துள்ளது. ஐ.நா. கடல் சட்ட ஒப்பந்தத்தின்படி, இந்த நாடுகளின் கடற்கரையிலிருந்து 12 நாட்டிக்கல் மைல் தொலைவு வரையிலான பகுதி அந்தந்த நாடுகளுக்கே சொந்தம். இதில் அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் கிடையாது.
இது இரண்டு நீர்வழிகளை இணைப்பதாலும், சர்வதேச கப்பல் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படுவதாலும், அனைத்து நாடுகளின் கப்பல்களும் தடையின்றிப் பயணிக்கும் உரிமை உண்டு. எந்தக் கடலோர நாடும் அல்லது வெளிநாடும் இதனைத் தடையோ அல்லது சொந்தம் கொண்டாடவோ சர்வதேச சட்டம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை.
அமெரிக்கா ஐ.நா. கடல் சட்ட ஒப்பந்தத்தில் உறுப்பினராக இல்லாவிட்டாலும், சர்வதேசச் சட்டங்களை அது மீற முடியாது. அதனால்தான் அரசியல் விமர்சகர்கள், “இது வழக்கம்போல டிரம்ப் எப்படியாவது பேசிவிட்டு பின்னர் பின்வாங்கும் ஒரு தந்திரமாகத்தான் இருக்க வேண்டும்” என்று கூறுகிறார்கள்.
டிரம்பின் இந்தச் செயலுக்கு ஈரான் சும்மா இருக்குமா? சக்கையான பதிலடியைக் கொடுத்துள்ளது. அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களில் ஒன்றான கலிபோர்னியாவை ஈரானின் ஒரு புதிய பிராந்திய பகுதி என்று குறிப்பிட்டு ஈரான் ஒரு வரைபடத்தை வெளியிட்டுள்ளது.
ஐதராபாத்தில் உள்ள ஈரான் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் இந்த வரைபடம் பதிவிடப்பட்டது. அதில் கலிபோர்னியா மாநிலத்தை நீல நிறத்தில் பளிச்சிடும் வகையில் காட்டி, அதை “இஸ்லாமிய குடியரசான ஈரானின் புதிய பிராந்திய பகுதி” எனப் பதிவிட்டனர்.
ஏன் கலிபோர்னியாவைத் தேர்ந்தெடுத்தார்கள் தெரியுமா?
உலகிலேயே அதிக அளவிலான புலம்பெயர்ந்த ஈரானியர்கள் வாழும் இடமாக அமெரிக்காவின் கலிபோர்னியா திகழ்கிறது. குறிப்பாக லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டியில் சுமார் 1,41,000 ஈரானிய வம்சாவளி அமெரிக்கர்கள் வசிக்கின்றனர். லாஸ் ஏஞ்சலஸின் வெஸ்ட்வுட் பகுதி “தெஹ்ரான்கலெஸ்” என்றே அழைக்கப்படுகிறது (தெஹ்ரான் என்பது ஈரானின் தலைநகர்). 1979 ஆம் ஆண்டில் ஈரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு, இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்தப் பகுதி ஒரு முக்கிய மையமாக மாறியது குறிப்பிடத்தக்கது.
ஹார்முஸ் ஜலசந்திக்கு அமெரிக்கா உரிமை கொண்டாடியதும், அதற்குப் பதிலாக கலிபோர்னியாவை ஈரான் உரிமை கொண்டாடியதும் உலக அரசியலில் பெரும் கேலி கிண்டல்களையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. டிரம்பின் இந்த ராஜதந்திர விளையாட்டுக்கு ஈரான் தனது சொந்த ஸ்டைலில் செக் வைத்துள்ளது.. இந்நிலையில் , தற்பொழுது ஈரான் மற்றும் அமெரிக்கா போரில் , ஆயுத யுத்த சண்டைகளை போட்டுவிட்டு , அடுத்த படியாக வார்த்தை போர் சண்டைகளை போட ஆரம்பித்து விட்டார்கள்..
முதலாவதாக, 60 நாள் ஒப்பந்தம் முடிந்தும் , இரண்டு நாடுகளும் போர் தொடுத்து வந்த நிலையில் , ஈரான் தரப்பில் இருந்து , அமெரிக்கா போர் ஒப்பந்த நாட்களில் வரம்பு மீறி செயல்பட்டது என்று கூற, பதிலுக்கு அமெரிக்கா ஈரான் வெள்ளை கொடி காட்டி எங்களிடம் சரணடைந்தால் மட்டுமே போர் நிறைவு பெரும் என்று சொல்ல தற்பொழுது வரை போர் முடியாமல் போய் கொண்டிருக்கிறது..
இந்நிலையில் , இரண்டு நாடுகளும் முரண்டு பிடிப்பதை விட்டுவிட்டு அமைதி முறையில் நாடு மக்களின் நலனை கருத்திற்கொண்டு செயல்பட்டால் மட்டுமே போர் நிறைவு பெரும் என்பது பொதுவான கோரிக்கையாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.. அடுத்ததாக, இந்த போர் விவகாரத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!



