ஜூன் 5-ல் திரைக்கு வருகிறது ஜெயராமின் ‘பரிமளா அண்ட் கோ’

பிரபல நடிகர் ஜெயராம் நடிக்கும்  பரிமளா அண்ட் கோ’  திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பிரபல நடிகர் ஜெயராம் நடிக்கும் ‘பரிமளா அண்ட் கோ’ என்ற புதிய திரைப்படம், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சனில்குமார், யோகி பாபு, சாண்டி, மிஷ்கின், பூர்ணிமா ரவி மற்றும் ஜிகேஎம் தமிழ்குமரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

ஒரு சாதாரண குடும்பத்தின் மீது சந்தேகிக்கப்படும் ஒரு உயிர் மாய்யக்க்கப்பட்டதை மையமாகக் கொண்டு இப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘பரிமளா அண்ட் கோ’ திரைப்படம் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், நடிகர் ஜெயராமின் ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *