திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்க பாஜக முயற்சி – அமைச்சர் அருண்ராஜ் குற்றச்சாட்டு!

திருப்பரங்குன்றத்தை அயோத்திப் போல மாற்ற பாஜக முயற்சி செய்வதாக  அமைச்சர் அருண்ராஜ்  குற்றம்சாட்டியுள்ளார்.
திருவாரூரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியார்களிடம் பேசினார். அப்போது, ஆட்சியில் இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, ஆட்சியை இழந்தப் பிறகு மற்றொரு நிலைப்பாடு என திமுக மாறுவது புதிதல்ல என்று கூறினார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, கள்ளக்குறிச்சி சாராய உயிரிழப்பு சம்பவம், மாணவி லாவண்யா உயிரிழப்பு உள்ளிட்ட விவகாரங்களில் சிபிஐ விசாரணை கோரப்பட்டபோது திமுக எதிர்ப்பு தெரிவித்ததாகக் குற்றம்சாட்டினார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு என்று தெரிவித்தார். திருப்பரங்குன்றத்தை அயோத்தியைப் போல மாற்ற பாஜக முயற்சி செய்வதாகக் குற்றம் சாட்டினார். மேலும் திமுகவும் அதிமுகவும் இணைந்து தவெக ஆட்சியைக் கவிழ்க்க திட்டமிடுகிறார்களா என்றும் வினவியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *