காதலர் தினம் தெரியும் …. சிங்கிள்ஸ் டேத்தெரியுமா?

காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி மாதம் முழுவதும் பல்வேறு தினங்கள் கொண்டாடப்படுகின்றன. பிப்ரவரி 7 ஆம் தேதி ரோஸ் டேயுடன் தொடங்கி, ப்ரோபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டே மற்றும் இறுதியாகப் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் என நீண்ட லிஸ்டே உள்ளது.

காதல் என்பது அனைவருக்கும் உடனடியாக அமைவதில்லை. உண்மையான காதல் மிக அரிதானதாகவே அமையும். இதனால், காதலர்களைத் தவிர்த்துத் தனித்திருக்கும் பெரும்பான்மையினர் ‘சிங்கில்ஸ்’ என அழைக்கப்படுகின்றனர்.

நவம்பர் 11 ஆம் தேதி சிங்கிள்ஸ் டேக்கொண்டாடப்படுகிறது. இது, காதலர் தினத்தைப் போலவே, தனித்திருக்கும் நபர்களுக்காக ஒரு சிறப்பு நாளாகும். சிங்கிள்ஸ் டே, முதலில் சீனாவில் அறிமுகமானது, பின்னர் உலகம் முழுவதும் பிரபலமானது. இன்று, பலரும் தங்களை கொண்டாடும் நாளாகச் சிங்கிள்ஸ் டேவை அனுசரிக்கின்றனர்.

சிங்கிள்ஸ் டே, தங்களை தாங்களே நேசிக்கவும், காதல் தோல்வியில் சிங்கிள் ஆனவர்கள் அதிலிருந்து விடுபட்டுப் புதிய பாதையைத் தேர்வு செய்யவும் ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். இந்த நாளில் ‘மூன்றாம் பிறை’, ‘இயற்கை’, ’96’, ‘தளபதி’ போன்ற படங்களைப் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *