
சென்னை: சென்னையின் பிரபல தியேட்டர்களில் ஒன்றான உதயம் தியேட்டர் இடிக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்தத் திரையரங்கம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டு உள்ளது. நொறுங்கி விழுந்து… தரைமட்டமான உதயம் தியேட்டரின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
பழைய சென்னையின் பிரபலமான பகுதிகளில் உதயம் தியேட்டர் ஒன்றாகும். சென்னையின் பிரபலமான பகுதிகளில் உதயம் தியேட்டர் ஒன்றாகும்.
தற்போது அந்தத் தியேட்டர் இருக்கும் பகுதியைக் காசாகிராண்ட் நிறுவனம் வாங்கி உள்ளது.
இங்கே மிகப்பெரிய 25 மாடி அடுக்குக் கட்டிடம் ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளது. அலுவலகம் + குடியிருப்பு பாணியில் இங்கே அடுக்குமாடி கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஏற்கனவே சென்னையில் பல முக்கிய பழைய ஹோட்டல்கள், இடங்கள் வாங்கப்பட்டு உயர் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
அப்படித்தான் தற்போது உதயம் தியேட்டரும் வாங்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில் தற்போது அங்கே ஓடும் கர்ணன் உள்ளிட்ட பழைய படங்கள் விரைவில் நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
உதயம் தியேட்டர் பின்னணி:
உதயம் தியேட்டரில் என் இதயத்தைத் தொலைச்சேன்… என்று பாடல் தொடங்கி சென்னையின் லேண்ட்மார்க் பகுதிகளில் ஒன்றாக இந்தத் தியேட்டர் இருந்தது. இந்த நிலையில்தான் அந்தத் தியேட்டர் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2009ல்தான் சென்னையில் உள்ள உதயம் திரையரங்கை அதன் நிறுவன உறுப்பினர் பரமசிவம் பிள்ளை மீண்டும் வாங்கினார். சொத்துக்களை குடும்பத்திற்குள் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாக ரூ.80 கோடிக்கு வாங்கினார். தற்போது அந்தத் தியேட்டர் இருக்கும் பகுதியைக் காசாகிராண்ட் நிறுவனம் வாங்கி உள்ளது.
இங்கே மிகப்பெரிய 25 மாடி அடுக்குக் கட்டிடம் ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளது. அலுவலகம் + குடியிருப்பு பாணியில் இங்கே அடுக்குமாடி கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அசோக் பில்லர் அருகே அமைந்துள்ள இந்தத் திரையரங்கம் 1983 இல் கட்டப்பட்டது. இது சென்னையின் மிகப்பெரிய மற்றும் வெற்றிகரமாக இயங்கும் சினிமா தியேட்டர்களில் ஒன்றாக இருந்தது.
ஆனால் அதன்பின் பெரிய தியேட்டர்கள் இங்கே வந்துவிட்டது. அதேபோல் பல மல்டிபிளக்ஸ் இங்கே வந்துவிட்டது.
இதனால் இந்தத் தியேட்டரின் மவுசு குறைந்தது. அதோடு இல்லாமல் இந்தத் தியேட்டருக்கு அருகிலேயே தற்போது மால் கட்டப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் ஹவுசிங் போர்ட் மூலம் இந்தக் குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது.
ஒயின் கிளாஸ் வடிவத்தில் தோன்றும் 22-அடுக்கு அமைப்பு, அசோக் பில்லரில் உள்ள ட்ரை-ஜங்ஷன் ப்ளாட்டில் கட்டப்பட்டு வருகிறது.
கிட்டத்தட்ட ஒரு லட்சம் சதுர அடி இடத்தில் 24,000 சதுர அடி அளவு கொண்ட மாலுக்கு ஒதுக்கப்படும். மற்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு அமைக்கப்படும். ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பின் அளவும் 1,700 சதுர அடி மற்றும் 2.13 ஏக்கர் நிலத்தில் முழு கட்டமைப்பையும் கட்ட 227.26 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுமானத்தில் தற்போது 10 மாடிகள்வரை கட்டப்பட்டு உள்ளது. மீதம் உள்ள மாடிகளின் கட்டுமானம் தற்போது நடந்து வருகிறது.
இங்கே மால் வருவதால் இனி உதயம் தியேட்டர் வியாபாரம் பெரிய அளவில் இருக்காது.
