நடிகர் மம்முட்டியின் களம்காவல் படம் முதல் நாளே குவித்த வசூல் ?

நடிகர் மம்முட்டியின் களம்காவல் படம் முதல் நாளில்  15 கோடி ரூபாய் வசூல் சாதனைப் படைத்துள்ளது.

மலையாள மூத்த நடிகரான மம்முட்டியின் ‘களம்காவல்’ எனும் புதிய படம் கடந்த 5 ஆம் தேதி வெளியானது. ரோர்சார்ச், புழு, பிரம்மயுகம் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து மீண்டும் இப்படத்தில் வில்லனாக மம்முட்டி நடித்துள்ளார். இதில், நடிகர் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் ஜிதின் ஜோஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதை தொடர்ந்து, கிரைம் திரில்லர் படமாக உருவான ‘களம்காவல்’ படத்தை நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் மம்முட்டி இணைந்து தயாரித்துள்ளனர். இதையடுத்து, காவல்துறைக்குச் சவால்விடும் கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருக்கிறார். இந்நிலையில், முதல் நாளில் 15 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  இப்படமானது மலையாள ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *