Ayalaan VS Captain Miller: 10 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா!

Advertisements

பொங்கல் ரேஸில் போட்டியிட்ட படங்கள் அயலான் மற்றும் கேப்டன் மில்லர். இரு படங்களுக்கு கலவையான விமர்சனங்கள் வந்தது. சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம் குடும்ப ரசிகர்களை கவரும் என்றும், கேப்டன் மில்லர் இளைஞர்களுக்கு பிடிக்கும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், கேப்டன் மில்லர் மற்றும் அயலான் இரு திரைப்படங்கள் வெளிவந்து 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த கேப்டன் மில்லர் திரைப்படம் 10 நாட்களில் உலகளவில் ரூ. 70 கோடி வரை வசூல் செய்துள்ளது. அதே போல் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம் ரூ. 75 கோடிக்கும் மேல் உலகளவில் கடந்த 10 நாட்களில் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்த்த வசூல் இதுவரை கிடைக்கவில்லை என்ற பேச்சு ஒரு பக்கம் இருந்தாலும், இந்த இரண்டு திரைப்படங்களும் இனி வரும் நாட்களில் உலகளவில் எந்த அளவிற்கு வசூல் செய்யப்போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *