Advertisements

திமுகவுடன் 11 ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டணி அமைத்துக் கொண்ட தேமுதிக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது அதன் வேட்பாளர்கள் யார் யார் என்ற பட்டியல் வெளியே கசிந்து உள்ளது.
திமுக தரப்பில் தொகுதிகள் குறித்து பிரேமலதா விஜயகாந்த் என்னென்ன பேசினார் தற்பொழுது அவருக்கு என்னென்ன தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது அதில் யார் யார் வேட்பாளர்களாக நிறுத்தப் போகிறார்கள் என்ற பரபரப்பு பட்டியல் குறித்து ஜெம் தொலைக்காட்சி வழங்கும் சிறப்பு செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
தமிழக அரசியலில் பரபரப்பு திருப்பமாக திமுகவுடன் தேமுதிக புதிய கூட்டணி அமைத்திருக்கிறது. நீண்ட இழுபறிக்கு மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் இந்த முடிவை தற்போது அறிவித்திருக்கிறார்.
முன்னதாக அவர் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொழுது தங்களுக்கு 20 தொகுதிகள் வேண்டுமென ஒரு பட்டியலை திமுக மேலிட தரப்பில் கொடுத்ததாக தெரிகிறது.
அதில் விருகம்பாக்கம் பல்லாவரம் விழுப்புரம் கும்மிடிப்பூண்டி கே வி குப்பம் விக்கிரவாண்டி ரிஷிவந்தியம் உளுந்தூர்பேட்டை விருத்தாச்சலம் கடலூர் சிங்காநல்லூர் கோவை வடக்கு மதுரை மேற்கு திருப்பரங்குன்றம் நெய்வேலி கடலூர் சாத்தூர் விருதுநகர் சிவகாசி ஆகிய தொகுதிகள் இடம் பெற்று இருந்தன.
மேற்படி 20 தொகுதிகளுக்கும் தேமுதிக சார்பில் யார் யார் போட்டியிடுவார்கள் என்ற பட்டியலையும் பிரேமலதா விஜயகாந்த் முன்னதாகவே தயார் செய்து வைத்திருந்தார் அது குறித்த தகவலும் திமுக மேல் இடத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில் விருத்தாச்சலம் அல்லது ரிஷிவந்தியம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார் என்பது சிறப்பு செய்தி ஆகும் அதேபோல் விருதுநகர் சாத்தூர் சிவகாசி ஆகிய மூன்று தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார்.
விருகம்பாக்கம் தொகுதியில் பார்த்த சாரதி போட்டியிடுகிறார் விழுப்புரம் அல்லது விக்கிரவாண்டி தொகுதியில் எல். வெங்கடேசன் போட்டியிடுகிறார் பல்லாவரத்தில் டி முருகேசன் போட்டியிடுகிறார் பாப்பிரெட்டிப்பட்டியில் இளங்கோவனும் சேலம் தெற்கு தொகுதியில் அழகாபுரம் மோகன் ராஜன் போட்டியிடுகிறார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது மட்டுமல்லாமல் திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒரு ராஜ்யசபா இடத்திற்கு தேமுதிக பொருளாளரும் பிரேமலதா விஜயகாந்தின் சகோதரருமான இயற்கை எல் கே சுதீஷ் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் என்பதும் முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது . எல் கே சுதீஸை எம்பியாக வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக பிரேமலதா விஜயகாந்த் போராடி வந்திருக்கிறார் என்பதும் முக்கிய செய்தியாகும்.
இதனிடையே பிரேமலதா விஜயகாந்த் சார்பில் 20 தொகுதிகள் கோரிக்கை வைக்கப்பட்டாலும் ஏழு தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா பதவி என்கிற அளவில் கூட்டணி பேசி முடிக்கப்பட்டதாக தெரிகிறது.
எனவே தேமுதிக சார்பில் ஏழு தொகுதிகளில் அந்த கட்சி போட்டியிடுகிறது இதில் பிரேமலதா விஜயகாந்த் ஒரு தொகுதியிலும் விஜய பிரபாகரன் ஒரு தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது.
Advertisements


