DMK – P. K. Sekar Babu: ஆகாய நடைமேடை அமைக்கும் பணி துவக்கம்!

Advertisements

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆகாய நடைமேடை அமைக்கும் பணியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

சென்னை: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டுப் பேருந்து முனையம் கடந்த ஜனவரி மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இதனிடையே, கிளாம்பாக்கத்தில் ரெயில் நிலையம் அமைக்கவும், பேருந்து முனையத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கவும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதேவேளை, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தையும் கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தையும் இணைக்கப் புதிய நடைமேம்பாலம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜி.எஸ்.டி. சாலையின் குறுக்கே கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தையும், கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் இன்று தொடங்கியுள்ளன.

79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 220 மீட்டர் நீளத்தில் இந்தப் புதிய நடைமேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. புதிய மேம்பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பூமி பூஜையில் பங்கேற்று நடைமேம்பாலம் அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 6 ஏக்கர் பரப்பளவில் ரூ. 12.80 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நீரூற்றுகளுடன் கூடிய புதிய பூங்காவையும் அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *