திமுக – தேமுதிக புதிய கூட்டணி : சிக்கலில் விஜய் – ராமதாஸ்.! 

தமிழக அரசியலைப் பொருத்தவரையில் கடந்த மூன்று தினங்களாக மருத்துவர் அன்புமணி மிகவும் உற்சாகமாக இருக்கிறார் இதற்கு காரணம் பாரதிய ஜனதா கட்சியுடன் முழுமையான கூட்டணி ஏற்பாடுகள் நடைபெற்று விட்டன.
ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சியுடன்தான் கூட்டணி என்று முடிவெடுத்த அன்புமணி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாகவே டெல்லி மேலிடத்தில் தனது பேச்சு வார்த்தையை தொடங்கி விட்டார்.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தூதுவராக தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பை ஜெயந்த் பாண்டா சென்னை அக்கரையில் உள்ள அன்புமணி பங்களாவில் அவரை சந்தித்து பேசியிருக்கிறார்.
இருவரும் ஒரு மணி நேரம் அரசியல் நிலவரம் குறித்து பேசி இருக்கிறார்கள். அப்பொழுது ஒருங்கிணைந்த பாட்டாளி மக்கள் கட்சி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தால் மிகப்பெரிய மகிழ்ச்சி என பாண்டா தெரிவித்திருக்கிறார். ஆனால் அதற்கு 100 சதவீதம் வாய்ப்பு இல்லை என அடித்து பேசியிருக்கிறார் அன்புமணி.
ஒட்டுமொத்த பாட்டாளி மக்கள் கட்சியும் என் தலைமையில் தான் இருக்கிறது.  ஒரு சிலர்தான் ஐயா ராமதாஸ் பக்கம் இருக்கிறார்கள் எனப் பல புள்ளி விவரங்களை எடுத்து சொல்லி இருக்கிறார்.
இந்த அடிப்படையில் தனக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் மேலும் ஒரு ராஜ்யசபா சீட்டு தர வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்.  இது குறித்து பாண்டா பேசும் பொழுது ராஜ்யசபா சீட்டு என்பது அதிமுக தான் முடிவு எடுக்க வேண்டும்.  இது குறித்து நான் எடப்பாடி பழனிச்சாமி இடம் பேசுகிறேன். தொகுதி பங்கீட்டை பொறுத்தவரையில் மேல் இடத்திற்கு தகவல் தெரிவித்து உங்களுக்கு பதில் சொல்கிறேன் என்று கூறி இருக்கிறார் .
இதற்கிடையே நடிகர் விஜய் குறித்தும் இருவரும் பேசியிருக்கிறார்கள் அப்பொழுது பாரதிய ஜனதா பக்கம் விஜய் வர வாய்ப்பு இல்லை என பாண்டா தெரிவித்திருக்கிறார் என்பதும் முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கூட்டணி விவகாரம் குறித்து டெல்லி பாஜக மேல் இடத்தை பொருத்தவரையில்  எடப்பாடி பழனிச்சாமி இடம் பேசிய பிறகு தான் முடிவு எடுக்க முடியும் என்ற நிலையில் இருக்கிறார்கள். அனேகமாக அன்புமணி தரப்புக்கு 15 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என தெரிகிறது இதற்கு அன்புமணியும் சம்மதம் தெரிவிப்பார் என்று சொல்லப்படுகிறது.  ஆகவே பாரதிய ஜனதா கட்சியுடன் அன்புமணி தலைமையிலான பாமக கூட்டணி உறுதியாகிவிட்டது .
இதற்கிடையே யாருடன் கூட்டணி சேர்வது என்பதில் முடிவெடுக்க முடியாமல் மருத்துவர் ராமதாஸ் திண்டாடி வருவதாக சொல்கிறார்கள். திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம்  என்ற திட்டத்தில் மருத்துவர் ராமதாஸ் செயல்பட்டு வந்தார். தற்பொழுது அதற்கு வாய்ப்பில்லை என தெரிகிறது.  திமுகவை பொருத்தவரையில் விடுதலைச் சிறுத்தைகள் தான் நமது முக்கிய கூட்டணி எனவே மருத்துவர் ராமதாசை இணைத்துக்கொள்ள முடியாது என தீர்க்கமாக முடிவெடுத்து விட்டார்கள். இதனால் மருத்துவர் ராமதாஸ் வழி தெரியாமல் புதிய சிக்கலில் சிக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையே பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவும் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது . விஜய்யுடன் கூட்டணி பேசிய தேமுதிக தற்பொழுது , .அதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. தமிழக அரசியல் களத்தில் விஜய் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் மிக குறைவாக இருப்பதாக தேமுதிக தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்த அடிப்படையில் திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்ற இறுதி முடிவுக்கு பிரேமலதா விஜயகாந்த் வந்திருக்கிறார்.  அதே சமயம் திமுக தரப்பிலும் தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் தர முடிவு செய்யப்பட்டு இருக்கிறது . எனவே திமுகவுடன் தேமுதிக கூட்டணி இணையும் என தெரிய வந்திருக்கிறது இதற்கான அறிவிப்பு ஜனவரி மாதத்தில் வெளியிடப்படுகிறது .
இதே சமயத்தில் திமுகவை பொருத்தவரையில் வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிக அளவில் பெண் வேட்பாளர்களை நிறுத்துவதற்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.  தற்பொழுது திமுக தரப்பில் 9 பெண் எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். அதிமுக தரப்பில் மூன்று பெண் எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். எனவே சட்டமன்றத்தில் பெண்களுக்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே இருந்து வருகிறது .  இந்த நிலையில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் 50 பெண் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என மு க ஸ்டாலின் முடிவு செய்து இருக்கிறார்.
இது தொடர்பான பெண் வேட்பாளர்கள் பட்டியலும் தயாராகி திமுக மேலிடத்தில் தற்பொழுது பரிசீலனையில் இருக்கிறது இதன் மூலம் பெண்கள் மத்தியில் திமுக பேசும் பொருளாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது . இதற்கிடையே அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைக்கலாம் பாரதிய ஜனதா கட்சியுடன் விஜய் கூட்டணி அமைக்கலாம் என  செய்திகள் பரவி வருகின்றன. ஆனால் யாருடனும் கூட்டணி இல்லை என்பதில் விஜய் முடிவாக இருக்கிறார்.
அதேசமயம் தனித்துப் போட்டியிடவும் தற்போது அவர் ஆழ்ந்த யோசனையில் இருக்கிறார். எதுவாக இருந்தாலும் தனித்து போட்டியிட்டு தனது பலம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற முடிவுக்கு விஜய் வந்திருக்கிறார் . விஜயை பொறுத்தவரையில் அவர் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்ற முடிவில் எந்த மாற்றமும் இல்லை எனவே அவர் தனித்து களம் காணப் போகிறார் என்பதுதான் உண்மையான செய்தி.
இதற்கிடையே அதிமுகவை பொருத்தவரையில் இன்னும் கூட்டணிகள் எதுவும் முடிவாகவில்லை. சரியான கூட்டணி அமையாத நிலையில் அதிமுக குழப்ப நிலையில் இருந்து வருகிறது . இதற்கிடையே வருகிற ஜனவரி மாதத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் புதிய அணியை உருவாக்கும் திட்டத்தில் சசிகலா ஈடுபட்டு வருவதாக சொல்கிறார்கள்.  இது குறித்து திரை மறைவில் பல செயல்திட்டங்களை செங்கோட்டையனும் சசிகலாவும் உருவாக்கி வருவதாக சொல்லப்படுகிறது .
இதனிடையே தமிழக அரசியல் கழகத்தில் இப்போதுள்ள சூழ்நிலையில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு என திமுக தரப்பில் ஒரு சர்வே எடுக்கப்பட்டிருக்கிறது.  இதில் திமுக தான் வெற்றி பெறும் என தகவல் சொல்லப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *