தோல்வியை தழுவிய கூட்டணி கணக்கு..எடப்பாடி – அமித்ஷா மோதல்..!

Advertisements
வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தரப்பில் மெகா கூட்டணி அமையும் என்று பேசி வந்த எடப்பாடி பழனிச்சாமி தற்போது தோல்வி முகத்தில் திண்டாடுகிறார். என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது. தேர்தல் தொடர்பான எடப்பாடி பழனிச்சாமியின் வியூகங்கள் தோல்வியை தழுவுகின்றன என்ற தகவலால் , தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷா இடையே மீண்டும் கடுமையான மோதல் வெடித்திருக்கிறது.
பிரபல தமிழ் சினிமா நடிகர் விஜய் அரசியல் களத்தில் இறங்கி இருப்பதால் வருகிற சட்டமன்றத் தேர்தல் கடுமையான போட்டியை சந்திக்கும் என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில் தொடக்கம் முதலே கூட்டணி விவகாரங்களில் எடப்பாடி பழனிச்சாமி எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியாகவே முடிவடைந்தன.
அதேசமயம் திமுக தரப்பில் ஏற்கனவே உள்ள கூட்டணியை தக்க வைத்துக் கொண்டதுடன் தற்பொழுது அதிமுகவையும் துண்டு துண்டாக உடைக்கும் தீவிர முயற்சியில் களம் இறங்கி இருக்கிறது திமுக. நாம் தமிழர் சீமான் ஏற்கனவே தனித்துப் போட்டியிடுவதாக முடிவு எடுத்த நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயும் தணித்தே போட்டியிடுவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இந்த நிலையில் திமுக அதிமுக தவெக நாம் தமிழர் என நான்கு முனை போட்டியை வருகிற தேர்தல் சந்திக்க காத்திருக்கிறது.
அந்த வகையில் , தற்பொழுது திமுக கூட்டணியில் காங்கிரஸ் விடுதலைச் சிறுத்தைகள்,  முஸ்லிம் லீக் , மதிமுக,  இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் , மனிதநேய மக்கள் கட்சி , கொங்கு தேச கட்சி மக்கள் நீதி மையம் ஆகியவை கூட்டணியில் உள்ளன.
வருகிற சட்டமன்றத் தேர்தலில் இந்த கூட்டணியில் தொகுதி கேட்டு குழப்பங்கள் இருந்தாலும் யாரும் திமுக கூட்டணியை விட்டு விலகும் முடிவை எடுக்கவில்லை. இதற்கிடையே விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக கட்சிக்கு எட்டு இடங்கள் தரப்பட்டு அதன் தலைவரான பிரேமலதா விஜயகாந்த் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது . இதனால் திமுக கூட்டணியில் தேமுதிகவும் இடம்பெறுகிறது.
இது மட்டுமல்லாமல் அதிமுகவை உடைக்கும் வகையில் டிடிவி தினகரன் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரையும் திமுகவுக்கு இழக்கும் தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே அதிமுகவை பொருத்தவரையில் பலம் வாய்ந்த கட்சியாக பாரதிய ஜனதா கட்சி மட்டுமே கூட்டணியில் உள்ளது. மேலும் சில கட்சிகளை கூட்டணியில் சேர்க்காவிட்டால் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்பது நிதர்சனமான உண்மையாக பார்க்கப்படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமியை பொருத்தவரையில் தொடக்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை அதிமுகவில் இணைத்து விடலாம் என முயற்சி செய்தார் ஆனால் திருமாவளவன் இதற்க்கு மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து , பிரேமலதா விஜயகாந்த் இடமும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்று தெரிவித்த போதிலும் பிரேமலதா விஜயகாந்த் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
இதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தற்பொழுது நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்திற்கு மிகப்பெரிய மாஸ் இருக்கிறது.  எனவே தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி சேரலாம் என்ற பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது எடப்பாடி பழனிச்சாமி இதில் மிகப் பெரிய நம்பிக்கையுடன் இருந்தார். அந்த வகையில் தான் அதிமுக ஒருங்கிணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தைரியமாக தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள பாஜக மேல் இடமும் நடிகர் விஜய்யை வற்புறுத்தி வந்தது. எதற்கும் செவி சாய்க்காத விஜய் வருகிற தேர்தலில் தனித்தே களம் காணலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். இது தொடர்பாக தமிழக வெற்றி கழகம் சார்பில் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் தலைமை நிர்வாகியான நிர்மல் குமார் தனது பேட்டியின் போது அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார்.
இது மட்டுமல்லாமல் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அமித்ஷாவிடம் விஜய் கூட்டணி பற்றி கேள்வி கேட்கப்பட்டது . ஆனால் அவர் விஜயுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்றோ அவரை கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம் என்றோ பதில் சொல்லாமல் மழுப்பலாகவே பதில் சொல்லிவிட்டார். இதன் பின்னணியில் நடிகர் விஜய்யுடன் பாஜக மேலிடம் அதிகாரப்பூர்வமான பேச்சு வார்த்தை எதுவும் நடத்தவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது.
இதற்கிடையே அதிமுகவிலிருந்து ஏற்கனவே சிலர் விலகிய நிலையில் அதிமுக முக்கிய தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனும் போர்க்கொடி பிடித்தார் தற்பொழுது அவரது நிலைப்பாடு என்ன என்பது தெரியவில்லை. ஆக மொத்தமாக தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் இருக்கும் நிலையிலேயே அதிமுகவின் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பது வெளியே தெரிய வந்திருக்கிறது.
இத்தகைய தகவல்களால் உள்துறை அமைச்சர் அமித்ஷா மிகவும் கோபத்தில் இருக்கிறார். தமிழ்நாட்டில் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதில் பிரதமர் மோடி மிக உறுதியாக இருக்கிறார்.. அதன் பெயரில் தான் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமித்தார்.
ஏற்கனவே டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்தித்த பிறகு மிகவும் மோசமான மனநலையில் முகத்தை கைகுட்டையால் மூடிக்கொண்டு வெளியே வந்தார்.
இப்பொழுது மீண்டும் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. தேர்தல் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி எடுத்த முடிவுகள் சரியானது அல்ல இது தோல்வியை தழுவும் என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டு அடுத்த மாதம் டெல்லிக்கு வர நாள் குறித்ததாக சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்கள் அனைத்திலும் அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் வருகிற தேர்தலிலும் அதிமுக தோல்வியைசந்தித்தால் தொண்டர்கள் அனைவரும் துவண்டு விடுவார்கள் இன்னும் சொல்லப்போனால் அதிமுகவின் பலம் பாதிக்கு மேல் குறைந்து விடும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
இதற்கிடையே கண்ணுக்கு எட்டிய தூரத்தில் புதிய கூட்டணிக்கான வாய்ப்புகள் எதுவும் அதிமுகவுக்கு இல்லை என்றே தெரிகிறது. எடப்பாடி பழனிச்சாமி என்ன தைரியத்தில் இந்த தேர்தலை சந்திக்கிறார் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. குறைந்தபட்சம் அதிமுகவை ஒருங்கிணைத்தால் ஓரளவு அதிமுக தொண்டர்கள் உற்சாகம் அடைவார்கள் அதே வேளையில் திமுக பக்கம் தாவுவதற்கு திட்டம் போட்டு இருக்கும் டிடிவி தினகரன் மற்றும் பன்னீர்செல்வத்தை திசை திருப்பவும் முடியும்.
எடப்பாடி பழனிச்சாமி சசிகலா ஒருங்கிணைந்த அதிமுக வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது சசிகலாவின் தேர்தல் பிரச்சாரம் அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்ற கணிப்பும் சொல்லப்பட்டு இருக்கிறது. இருந்தபோதிலும் அதிமுகவுக்கு இன்னும் இரண்டு முக்கிய கட்சிகளின் கூட்டணி இருந்தால்தான் முழுமையான வெற்றி பெற முடியும் என்ற நிலவரம் காணப்படுகிறது.
இதன் நிமித்தமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு முக்கிய முடிவு எடுத்திருக்கிறார் அதன் அடிப்படையில் தான் அன்புமணி தலைமையிலான பாமக உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது .
இதில் அன்புமணி கேட்கும் தொகுதிகள் விவகாரம் தவிர மற்றபடி அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் இணையும் என தெரிகிறது. மருத்துவர் ராமதாசை பொறுத்தவரையில் அன்புமணி பாஜகவில் இணைவதால் திமுகவில் இணையலாம் என்று முயற்சிகள் செய்து வந்தார் . ஆனால் இதற்கு மு க ஸ்டாலின் ஒத்துவரவில்லை எனவே ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி இந்த தேர்தலில் போட்டியிடாது என தெரிகிறது.
இதற்கெல்லாம் உச்சகட்டமாக அதிமுக பாஜகவுடன் கூட்டணி சேர்வதால் இஸ்லாமியர்கள் போன்ற சிறுபான்மையினர் வாக்கு வங்கியும் முழுமையாக கிடைக்காத சூழ்நிலை அதிமுகவுக்கு இருக்கிறது. எனவே எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி விஷயத்தில் ஏதாவது மாயஜால வேலைகள் செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பது தற்போதைய தேர்தல் நிலவரமாக இருக்கிறது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *