இஸ்ரேலில் துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்ததைக் கண்டனம் தெரிவித்தப் பிரதமர் மோடிக்கு நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் உள்ள ராமோத் பேருந்து நிறுத்தத்தில் 2 மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 6 பேர் உயிரிழந்த நிலையில் 12 பேர் படுகாயமடைந்தனர். பின்னர், தாக்குதல் நடத்திய இருவரையும் பாதுகாப்புப் படை வீரரால் சுட்டுக் கொல்லப்பட்டு துப்பாக்கிகள், வெடிமருந்துகளைக் கைப்பற்றினர்.
இச்சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் கண்டம் தெரிவித்துள்ளார். பின்னர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம் என்று பதிவிட்டுள்ளார். இது குறித்து, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தனது எக்ஸ் பதிவில், நம்மை அச்சுறுத்தும் பயங்கரவாதத்தை எதிர்த்து இஸ்ரேலுக்கு ஆதரவாக குரல் கொடுத்த இந்தியப் பிரதமர் மோடிக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
