Lok Sabha Elections 2024: விடுதலைசிறுத்தை கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு!

மக்களவை தேர்தலில் திமுக – விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் ஆளும் திமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அதே கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. இதுவரை முஸ்லிம் லீக், கொமதேக மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இன்னும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்குத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 2 தனித்தொகுதி, ஒரு பொதுத்தொகுதியும், தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவோம் எனக் கூறியிருந்தனர். இந்தநிலையில் திமுக கூட்டணியில் திருமாவளவன் தலைமையிலான விடுதலைசிறுத்தை கட்சி சார்பில் விழுப்புரம், சிதம்பரம் தொகுதியில் போட்டியிட ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாகத் தொகுதி பங்கீடு தொடர்பாகத் தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இன்று நேரில் சந்தித்தார். சென்னை தலைமை செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படலாமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விடுதலைசிறுத்தை கட்சி சார்பில் விழுப்புரம், சிதம்பரம் தொகுதியில் போட்டியிட ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *