Ambulance Accident: டிராக்டர் மீது 108 ஆம்புலன்ஸ் மோதி விபத்து!

சங்கரன்கோவில் அருகே உள்ள குவலக்கண்ணியில் அவசர உதவிக்காகச் சென்று கொண்டிருந்த 108 ஆம்புலன்ஸ் எதிர்பாராத விதமாக டிராக்டர் மீது மோதிய விபத்தில் மருத்துவ உதவியாளர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் முதல் இராஜபாளையம் செல்லும் சாலையில் குவலக்கண்ணியில் அவசர தேவைக்காகச் சென்று கொண்டிருந்த 108ஆம்புலன்ஸ்   சங்கரன்கோவிலிலிருந்து ராஜபாளையத்திற்கு குப்பைதரம் பிரிப்பதற்காகக் குப்பைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த டிராக்டரின் பின்பகுதியில் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளது.

இதில்  டிராக்டர் தலைகுப்புற கவிழந்து சாலை முழுவதும் குப்பைகள் சிதறியது. இவ்விபத்தினால் அரை மணி நேரத்திற்கு மேலாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் இதில் டிராக்டர் பின்னால் சிக்கிய ஆம்புலன்ஸ் இருந்த மருத்துவ உதவியாளர் மேகலா(29) என்பவரை அருகில் இருந்தவர்கள் பலத்த காயங்களுடன் மீட்டு மற்றொரு ஆம்புலன்ஸ்-ல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். விபத்துகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *