Arulmigu Gowmariayyan Temple: வெகுவிமரிசியாக நடைபெற்ற கொடிக்கம்பம் நடுதல் நிகழ்ச்சி!

தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழாவை  முன்னிட்டு கொடிக்கம்பம் நடுதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இதில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கௌமாரியம்மன்னை  வழிபட்டுச் சென்றனர்.

தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்தத் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் நிகழ்ச்சி நடைபெற்று வருவது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டுக்கான சித்திரை திருவிழாவை முன்னிட்டு எட்டு நாட்கள் திருவிழா இன்று கொடி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

முன்னதாகக் கண்ணீஸ்வரமுடையார் திருக்கோயிலில் அருகே செல்லும் முல்லைப் பெரியாற்றிலிருந்து முக்கோண வடிவிலான கொடி மர கம்பத்திற்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு மேல தாளங்கள் முழங்கக் கொடிக்கம்பத்தை ஊர்வலமாகச் சுமந்து வந்து கௌமாரியம்மன் திருக்கோவிலை அடைந்தனர்.

அங்குக் கோவில் வளாகத்தில் கௌமாரியம்மன் எதிரே கொடிக்கம்பத்தை நடுதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கொடிக்கம்பத்திற்கு வண்ணமலர் மாலைகளால் அலங்காரம் செய்து சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டனர்.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கொடி கம்பம் நடுதல் நிகழ்ச்சியைக் கண்டு கௌமாரியம்மன் தரிசித்துச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *